உலகில் எங்கும் எதிரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை: ஈரான் ராணுவம் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை!
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த மூன்று வாரங்களாகத் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களால் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது ஈரான் ராணுவம் தனது எதிரிகளுக்குப் பகிரங்கமான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. தங்களின் நாட்டு எல்லைகளைத் தாண்டி, உலகில் எந்த மூலையில் எதிரிகள் பதுங்கியிருந்தாலும் அவர்களைத் தேடிப் பிடித்துத் தண்டிப்போம் என ஈரான் ராணுவத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அபோல்பாஸ்ல் ஷெகார்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள அறிவிப்பில், இனிவரும் காலங்களில் எதிரி நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்குப் பூங்காக்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் என எந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் நடமாட்டத்தைத் தங்களின் உளவுப் பிரிவினர் துல்லியமாகக் கண்காணித்து வருவதாகவும், அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இந்தத் திடீர் அறிவிப்பானது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலைத் தாண்டி, சர்வதேச அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை அதிகப்படுத்தக்கூடும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஈரானின் இந்த அதிரடி மிரட்டலால் ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள முக்கியப் பொழுதுபோக்கு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடல்வழிப் பாதையில் ஈரானின் ஆதரவுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் உலகப் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது பொது இடங்களிலும் தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போரை நிறுத்தத் தந்திரமான முறையில் ஈரான் இத்தகைய மிரட்டல்களை விடுத்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையிலான மோதல் போக்கு மேலும் தீவிரம் அடைந்துள்ளதை இது காட்டுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
