போர் நிறுத்தமா? ஈரானுக்கு 15 அம்சத் திட்டம்... 5 நாள் கெடு விதித்த டிரம்ப்!

 
iran iran


அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாகப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திடீர் திருப்பமாக 5 நாட்களுக்குத் தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் "மிகவும் ஆக்கபூர்வமான" பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், சரியான நபர்களுடன் தாங்கள் பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காகத் தனது 'அல்டிமேட்டம்' கெடுவை 5 நாட்களுக்கு அவர் ஒத்திவைத்துள்ளார்.

ஈரான்

இதற்கிடையே, ஈரானுடனான நிரந்தரப் போர் நிறுத்தத்திற்காக 15 அம்சங்கள் கொண்ட ரகசியத் திட்டம் ஒன்றை பாகிஸ்தான் வழியாக டிரம்ப் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், ஈரான் இனி யூரேனியம் செறிவூட்டலில் ஈடுபடக்கூடாது, ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் மற்றும் மிக முக்கியமாக உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை  உடனடியாகத் திறந்து கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஈரான்

அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், ஈரானியத் தூதரக வட்டாரங்கள் "அமெரிக்கா தனக்குத் தானே பேசிக்கொள்கிறது" என விமர்சித்துள்ளன. எனினும், டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் வரை குறைந்துள்ளதால் உலக நாடுகள் சற்று நிம்மதி அடைந்துள்ளன. 5 நாள் இடைவேளைக்குப் பிறகு போர் நிற்குமா அல்லது மீண்டும் தீவிரம் அடையுமா என்பது இந்த 15 அம்சத் திட்டத்தில் ஈரான் எடுக்கும் முடிவிலேயே உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!