ஈரான் ஒரு கோடி ரூபாய் நோட்டு வெளியீடு... ஆனா இது வெறும் 700 ரூபாய் தான்... சரியும் ரியால் மதிப்பு!

 
iran iran


ஈரான் நாட்டில் நிலவி வரும் மிக மோசமான பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அரசு வரலாற்றிலேயே இல்லாத வகையில் '10 மில்லியன் ரியால்' (ஒரு கோடி ரியால்) மதிப்புள்ள புதிய பணத்தாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்குப் பிரம்மாண்டமான தொகையாகத் தெரிந்தாலும், இதன் உண்மையான மதிப்பு உலகச் சந்தையில் வெறும் 'சில்லறை' காசாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் போக்கு மற்றும் சர்வதேசத் தடைகளால் ஈரான் நாணயம்  கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் விளைவாக, ஒரு கிலோ அரிசி வாங்கவே லட்சக்கணக்கில் ரியால்களைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடைக்குச் செல்லும்போது பணத்தை நோட்டுகளாகக் கொண்டு செல்லாமல், கட்டுகளாகச் சுமந்து செல்லும் அவலத்தைத் தவிர்க்கவே இந்த 'ஹை-வேல்யூ' நோட்டை அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஒரு கோடி ரியால் என்பது இந்திய மதிப்பில் வெறும் ரூ. 650 முதல் ரூ. 725 வரை மட்டுமே இருக்கும் என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை. அந்நாட்டில் தற்போது ஒரு லிட்டர் பால் 6 லட்சம் ரியாலுக்கும், ஒரு கிலோ கோதுமை மாவு 5.2 லட்சம் ரியாலுக்கும் விற்கப்படுகிறது. "நோட்டில் பூஜ்ஜியங்கள் கூடிக்கொண்டே போகிறது, ஆனால் வாங்கும் திறன் குறைந்துகொண்டே போகிறது" என ஈரான் நாட்டு மக்கள் வேதனையுடன் புலம்பி வருகின்றனர். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் ஈரான் அரசு, அடுத்தகட்டமாகத் தனது நாணயத்திலிருந்து நான்கு பூஜ்ஜியங்களை  நீக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!