ஈரானில் இருந்து ஆர்மேனியா வழியாக தப்பித்த 1200 இந்தியர்கள்!
ஈரானில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு மின்னல் வேகத்தில் முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து புதுடெல்லியில் விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இதுவரை சுமார் 1200 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார். ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் உதவியுடன் இந்த பிரம்மாண்ட மீட்பு வேட்டை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மீட்கப்பட்டவர்களில் 845 பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 996 பேர் ஆர்மீனியாவுக்கும், 204 பேர் அஜர்பைஜானுக்கும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து இந்தியா வர வெளியுறவு அமைச்சகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கடல்வழிப் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

மறுபுறம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் இரண்டாவது மாதமாக நீடிப்பதால் மேற்கு ஆசியப் பகுதிகளில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அந்தப் பகுதிகளிலிருந்து இந்தியா திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை பிரதமர் மோடி வன்மையாகக் கண்டித்துள்ள நிலையில், இந்திய தூதரகங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
