ஈரானை ஒரே இரவில் அழிக்க முடியும்... ட்ரம்ப் கடைசி எச்சரிக்கை !

 
ஈரான் ட்ரம்ப் ஈரான் ட்ரம்ப்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய அதிரடித் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மோதல் தீவிரமடைந்துள்ளது. இதற்குப் பதிலடியாக அரபிக்கடலில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கி பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டுள்ளது.

ஈரான்

இந்த விவகாரத்தில் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருந்த இறுதி காலக்கெடு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிகிறது. இது தொடர்பாகப் பேசிய டிரம்ப், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து விட்டு போரை நிறுத்த ஈரான் உடன்படாவிட்டால், அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் முழுமையாகத் தரைமட்டமாக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஒரு இரவில் ஒட்டுமொத்த ஈரானையும் அழித்துவிட முடியும் என்றும், அந்த இரவு இன்றைய இரவாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் இஸ்ரேல் கத்தார் போர்

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரான் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெறுமனே போர்நிறுத்தத்தை மட்டும் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், மீண்டும் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்பதற்கான சர்வதேச உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே பின்வாங்க முடியும் என்றும் ஈரான் தூதரகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் தங்களது பிடியில் உறுதியாக இருப்பதால், இன்று இரவு ஏதேனும் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை பாயுமா என்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்து போயுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!