கோமாவில் ஈரான் உச்ச தலைவர் ? இன்று இரவு என்ன நடக்கும்? ட்ரம்ப் விதித்த 'கடைசி' கெடு!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து வெளியாகி இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல் உலகையே உலுக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பகிர்ந்து கொண்ட ரகசிய உளவுத்துறை தகவல்களின்படி, மொஜ்தபா காமேனி தற்போது சுயநினைவற்ற நிலையில் கோம் நகரில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. அவர் ஈரானின் எந்தவொரு முக்கிய முடிவெடுக்கும் செயலிலும் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக 'டைம்ஸ் யுகே' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆசியாவில் மோதல் வெடித்தது முதல் மொஜ்தபா காமேனி பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை குறித்த இந்த ரகசிய உளவுக் குறிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் அரசு ஊடகங்கள் அவர் கூறுவதாகச் சில செய்திகளை வெளியிட்டு வந்தாலும், உண்மையில் அவர் கோமாவில் இருப்பதாகவும், அவருக்கான இறுதிச் சடங்கு இடங்கள் கூடத் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தி டைம்ஸ் பத்திரிகை அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் ஈரான் நாட்டின் தலைமைப் பொறுப்பில் தற்போது மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விதித்துள்ள இறுதி எச்சரிக்கை உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8:00 மணிக்குள் உடன்படிக்கைக்கு வராவிட்டால், ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும் என்றும், அந்த நாடு கற்காலத்திற்குத் தள்ளப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானின் உச்ச தலைவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்நாடு டிரம்பின் இந்த மிரட்டலுக்குப் பணியுமா அல்லது போர் மேலும் தீவிரமடையுமா என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும் என்பதால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
