பரபரப்பு...ஈரான் உளவுத்துறை தலைவர் இஸ்ரேல் தாக்குதலில் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை முதல் 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெஹ்ரானில் உள்ள ஈரானின் உளவுத்துறை தலைவர் மற்றும் இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவித்தார்
எங்களின் துணிச்சலான விமானிகள், தெஹ்ரானின் வான்வெளிக்குள் புகுந்து ராணுவ தளங்கள், அணுசக்தி தளங்களை குறிவைத்து வருகின்றனர் என கூறியுள்ளார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் உளவுத்துறை தலைவர் முகமது கசெமி மற்றும் துணைத் தலைவர்கள் ஹாசன் மொஹாகெக் மற்றும் மொஹ்சென் பகேரி ஆகியோர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
முன்னதாக இஸ்ரேலின் தாக்குதலில், ஈரான் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் முகமது பகேரி, ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி போன்ற முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் தாக்குதலில் 224 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!