இஸ்ரேலில் அமெரிக்க தூதரகத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல்.... தூதரகம் மூடல்!

இஸ்ரேல் , ஈரான் போர் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரகம் லேசான சேதமடைந்துள்ளது. இதனால் இன்று தூதரகம் தற்கொலிகமாக மூடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நாடு கருதுகிறது. இதையடுத்து ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
இதனைத் தொடா்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதல் தொடா்ந்து 3வது நாளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட 406 பேர் பலியானார்கள். அதேபோல் இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏராளமானோர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!