காமேனியின் புகைப்படத்தை எரித்து சிகரெட் பற்ற வைக்கும் ஈரானிய பெண்கள்... வைரல் வீடியோ!
ஈரானில் நிலவும் கடும் ஒடுக்குமுறைக்கு எதிராக பெண்கள் புதிய வகை போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் புகைப்படங்களை எரித்து, அதிலிருந்து சிகரெட்டுகளைப் பற்றவைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த போராட்டம் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
How about the video pic.twitter.com/A5L6JO22mq
— Morticia Addams (@melianouss) January 9, 2026
இது வெறும் புகைப்பிடிக்கும் செயல் அல்ல என கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பெண்களை கட்டுப்படுத்தி வரும் மதவாத ஆட்சிக்கும், கட்டாய ஆடைக்கட்டுப்பாடுகளுக்கும் எதிரான வெளிப்படையான எதிர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. ‘சிகரெட் புரட்சி’ என அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, ஈரானிய சமூகத்தின் ஆழ்ந்த கோபத்தையும் மாற்றத்திற்கான விருப்பத்தையும் காட்டுகிறது.
2022ல் மஹ்சா அமினியின் மரணத்துக்குப் பிறகு எழுந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இந்த எதிர்ப்பு உருவாகியுள்ளது. பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை மீட்க எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்ற செய்தியை உலகிற்கு தெரிவித்து வருகின்றனர். இது ஈரானிய ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
