இருமுடி, தைபூசம்.. மேல்மருவத்தூரில் 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்!

 
மேல்மருவத்தூர்

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் நடைபெற உள்ள இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு, அந்த வழியாகச் செல்லும் 29 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தத் தற்காலிக நிறுத்தமானது 2025 டிசம்பர் 31 முதல் 2026 பிப்ரவரி 2 வரை (ரயில்களின் கால அட்டவணைப்படி மாறுபடும்) நடைமுறையில் இருக்கும்.

மேல்மருவத்தூர்

மேல்மருவத்தூரில் நின்று செல்லும் 29 ரயில்களில் சில முக்கியமான ரயில்கள், வைகை எக்ஸ்பிரஸ் (12635), பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637), ராக்போர்ட் (12653). பொதிகை (12661), நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667), அந்தியோதயா (20691), சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) , உழவன் எக்ஸ்பிரஸ் (16865), காசி தமிழ் எக்ஸ்பிரஸ் (16367), மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (16179), சேலம் எக்ஸ்பிரஸ் (22153), திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), ஹம்சபர் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் - மன்னார்குடி எக்ஸ்பிரஸ்.

மேல்மருவத்தூர்

ஆண்டுதோறும் இருமுடி மற்றும் தைப்பூச காலங்களில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூர் வருகை தருவார்கள். அவர்களின் பயணச் சிரமத்தைக் குறைக்கவும், சாலைப் போக்குவரத்தின் நெரிசலைக் தவிர்க்கவும் இந்தத் தற்காலிக நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களும் தலா 1 நிமிடம் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். இது தவிர, கூட்ட நெரிசலைக் குறைக்கத் தாம்பரம் - ராமேசுவரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!