"பெண் என்றால் வெறும் உடலா?" - ஜோதிமணி எம்.பி ஆவேசம்!

 
ஜோதிமணி எம்.பி

தன்னைப் பற்றி அவதூறாகப் பேசப்பட்ட வீடியோவை துணிச்சலுடன் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த ஜோதிமணி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் சித்தாந்தம் பெண்களை இழிவுபடுத்துவது தான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், ஜோதிமணி எம்.பி-யின் தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் அரசியல் வளர்ச்சி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஜோதிமணி, "பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் அனைவரையும் பாலியல் தொழிலாளர்களாகப் பார்க்கும் அழுகிப்போன மனநிலை இவர்களுக்கு உள்ளது. ஒரு பெண்ணின் உழைப்பு, அறிவு, தகுதி எதையும் இவர்கள் பொருட்டாக மதிப்பதில்லை" என்று சாடியுள்ளார்.

தான் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, எந்தப் பின்னணியும் இன்றி 21 வயதில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் என்பதை அவர் நினைவுகூர்ந்துள்ளார். சுமார் 20 ஆண்டுகாலக் கடுமையான உழைப்பிற்குப் பிறகுதான் தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்புக் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது... ஜோதிமணி பேட்டி!

"பணம் இல்லை என்ற காரணத்தால் எனது கட்சியிலேயே எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, எனது உழைப்பை மதித்துத் தலைவர் வாய்ப்பளித்தார். ஆனால், பாஜகவினரைப் பொறுத்தவரை பெண் என்றால் வெறும் 'உடல்' மற்றும் 'பாலியல் பொருள்' மட்டுமே" என்று அவர் மிக ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார். வருடத்தில் 365 நாட்களில் 50 நாட்கள் கூட விடுமுறை எடுக்காமல் மக்களுக்காக உழைப்பதாகவும், தனது தாயின் மறைவிற்குப் பிறகு தனித்து நின்று போராட்டங்களை எதிர்கொள்வதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் பெண்களையும் பொதுவெளியிலிருந்து அச்சுறுத்தி வெளியேற்றும் முயற்சி என்று ஜோதிமணி கூறியுள்ளார்.

"பாஜகவின் மாநிலத் தலைவர் தொடங்கி மாவட்டத் தலைவர் வரை இதையேதான் வெளிப்படுத்துகிறார்கள். வாதங்களில் தோற்றுப்போகும்போது பெண்களின் கண்ணியத்தைத் தாக்குவதையே அவர்கள் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தான் அச்சப்படப் போவதில்லை என்றும், தவறாகப் பேசியவர்கள்தான் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற இழிசெயல்களைச் செய்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், அப்போதுதான் பொதுவெளியில் பெண்களின் உரிமையை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!