தமிழ்நாட்டில் ஹிஜாப் அணிந்து வரத் தடையா? தமிழக அரசு விளக்கம்!

 
ஹிஜாப்

தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாப் அல்லது புர்கா அணிந்து வருவோருக்கு அனுமதி இல்லை என்றும், அவர்களுக்கு நகை விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த விவகாரம் பொதுமக்களிடையே, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தின் தீவிரம் கருதி, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ 'தகவல் சரிபார்ப்பகம்' (Fact Check TN) இன்று (ஜனவரி 13, 2026) ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

அதன்படி, நகைக்கடைகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. தமிழகத்தில் அத்தகைய எந்தவொரு கட்டுப்பாடும் அல்லது அறிவிப்பும் நகை வியாபாரிகள் சங்கத்தால் வெளியிடப்படவில்லை.

ஹிஜாப் பர்தா

உண்மையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள சில நகை வியாபாரிகள் சங்கங்கள் மட்டுமே பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்து வரும் (ஹெல்மெட், மாஸ்க், ஹிஜாப் போன்றவை) வாடிக்கையாளர்களை அடையாளம் காண வசதியாக இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அந்த செய்தியைத் தமிழகத்துடன் இணைத்து யாரோ விஷமிகள் வதந்தியைப் பரப்பியுள்ளார்கள்.

சமீபத்தில் வடமாநிலங்களில் சில நகைக்கடைகளில் முகத்தை மறைத்து வந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதைத் தொடர்ந்து, அங்குள்ள நகை வியாபாரிகள் இத்தகைய முடிவை எடுத்தனர். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இச்செய்தி திரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!