80 சவரன் போட்டும் பத்தலையா? கதறிய தந்தை.. மகளை அடித்துக் கொன்றதாக எஸ்.ஐ., மீது புகார்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், வரதட்சணை மற்றும் கள்ளக்காதல் காரணமாகக் காதல் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், தனது மகளைப் போலீஸ் எஸ்.ஐ. கணவரே அடித்துக் கொன்றுவிட்டு, தற்கொலை நாடகம் ஆடுவதாகப் பெண்ணின் தந்தை பரபரப்புப் புகார் அளித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட உறவினர்கள் எஸ்.ஐ.யைக் கைது செய்யக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாகப் பணிபுரியும் அருண்குமார் (30) என்பவருக்கும், இளவரசி (25) என்ற பெண்ணுக்கும் 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது இளவரசிக்கு 70 சவரன் நகைகள், கார் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் இளவரசியிடம் தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அருண்குமார் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது, அவரது மனைவி இளவரசி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளவரசியின் மரணம் குறித்து அவரதுத் தந்தை கருப்பசாமி, போலீஸில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.

"திருமணத்தின்போது 81 சவரன் தங்க நகைகள் உட்படச் சீர்வரிசைப் பொருட்களை என் மகளுக்குக் கொடுத்தேன். ஆனாலும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு என் கணவர் (எஸ்.ஐ.) கொடுமைப்படுத்தினார். மேலும், அருண்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனை என் மகள் தட்டிக் கேட்டதாலே, அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டுத் தற்கொலை நாடகம் ஆடுகிறார். அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்." மகளின் மரணம் தற்கொலை அல்ல, கொலைதான் என்று இளவரசியின் தந்தை புகார் அளித்த நிலையில், அவரது உறவினர்கள் எஸ்.ஐ. அருண்குமாரைக் கைது செய்யக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். இளவரசியின் தந்தை கொடுத்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எஸ்.ஐ. அருண்குமார் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
