அறவழியில் மக்களை சந்திப்பவர்களை கைது செய்வது ஜனநாயகமா? தவெக தலைவர் கடும் கண்டனம்!

 
புஸ்ஸி ஆனந்த்
 

கைது செய்வது தான் ஜனநாயகமா? தவெகவினர் கைதுக்கு விஜய் கடும் கண்டனம்.!
 
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து  தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகல் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறி தவெக நிர்வாகிகளை  போலீஸார்  கைது செய்தனர்.  
இதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளை சந்திக்க சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் கைதை கண்டித்து, தவெகவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். பின்னர், கைது செய்யப்பட்ட 2  மணி நேரத்திலேயே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் 100க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டனர்.

 இந்நிலையில், தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.

புஸ்ஸி ஆனந்த்

“கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்” என விஜய் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web