தை அமாவாசை இன்றா? நாளையா? எப்படி வழிபட்டால் முன்னோர் ஆசி கிடைக்கும்?!

 
கும்பமேளா காசி புனித நீராடி பெண்கள் தரிசனம் குளம் கடல் அமாவாசை சூரிய வணக்கம் நமஸ்காரம் கங்கை

தை அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த மிக முக்கியமான நாளாகும். இந்த வருடம் தை அமாவாசை இன்றா நாளையா என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

தை அமாவாசை என்பது சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வருகிறது. சூரியன் 'பிதுர்க்காரகன்' (தந்தை வழி) என்பதால், இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு பல தலைமுறைக்கும் நன்மையைத் தரும். "தெய்வத்தை விட முன்னோர்களின் ஆசி வலிமையானது" என்பார்கள். எனவே, இந்த நாளைத் தவறவிடாமல் முன்னோர்களை நினைத்து வழிபடுங்கள்.

ஜனவரி 18, அதிகாலை 12:03 மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது. ஜனவரி 19ம் தேதி அதிகாலை 1:21 மணிக்கு அமாவாசை திதி முடிவடைகிறது. எனவே, ஜனவரி 18ம் தேதியன்று அதிகாலை முதல் மாலை வரை தாராளமாக முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம்.

அமாவாசை தர்ப்பணம் திதி

முன்னோர்களை (பித்ருக்களை) முறையாக வழிபட்டால் குடும்பத்தில் தடைகள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. வழிபட வேண்டிய முறைகளைப் பார்க்கலாம் வாங்க. 

வசதி இருப்பவர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், காசி, கயா, வேதாரண்யம், திலதர்ப்பணபுரி அல்லது அருகில் உள்ள ஆறு மற்றும் கடற்கரையில் புனித நீராடித் தர்ப்பணம் கொடுக்கலாம். எள்ளும், தண்ணீரும் இறைத்துத் தர்ப்பணம் கொடுப்பது மிக முக்கியம். இதனை அதிகாலை முதல் மதியத்திற்குள் செய்வது சிறப்பு. ராகு காலம், எமகண்ட நேரத்தைத் தவிர்ப்பது நல்லது.

கங்கை அமாவாசை கடல் புனித நீராடல்

வீட்டைச் சுத்தம் செய்து, முன்னோர்களின் படங்களுக்குத் துளசி அல்லது மல்லிகைப் பூ அணிவிக்கவும். முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளை (படையல்) சமைத்து மதிய வேளையில் படைக்க வேண்டும். படையலில் வாழைக்காய், அகத்திக் கீரை, மற்றும் பாயசம் இடம்பெறுவது விசேஷம்.

நாம் படைத்த உணவை முதலில் காகத்திற்கு வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பின்னரே குடும்பத்தினர் சாப்பிட வேண்டும். காகம் முன்னோர்களின் வடிவில் வந்து உணவை ஏற்பதாக ஐதீகம். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் அல்லது பசு மாட்டிற்கு அகத்திக் கீரை வழங்குவது முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத்தரும்.

அமாவாசை அன்று வீட்டில் கோலம் போடக்கூடாது. அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கும் வரை வழக்கமான பூஜைகளைச் செய்யக்கூடாது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!