பழனி தனி மாவட்டமாக பிரிக்கப்படுகிறதா?... முக்கிய அறிவிப்பு!

 
பழனி
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு முன்பு 13 மாவட்டங்கள் தான் இருந்தது. அதாவது, சென்னை, தென் ஆற்காடு, வட ஆற்காடு, சேலம், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்கள் தான் இருந்தன. 1966ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரியை பிரித்ததே வரலாற்றின் முதல் மாவட்ட பிரிவாகப் பார்க்கப்படுகிறது. அப்போது, சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர்   வட்டங்கள் உள்ளடக்கிய பகுதி தர்மபுரி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!

அதேபோல், சேலத்தில் இருந்து ஆத்தூரை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும்,   திண்டுக்கல்லில் இருந்து பழனியை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும்  தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகிறது. அதேபோல், கோவை மற்றும் திருப்பூரை பிரித்து பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனவும்   ஈரோடு மாவட்டத்தைப் பிரித்து கோபிசெட்டிப்பாளையத்தை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளும் எழுந்துள்ளன.  

பழனி


இந்நிலையில், புதிய மாவட்டம் பிரிப்பது குறித்து முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி  திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதேபோல், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் கொடைக்கானலை திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரித்து பழனியுடன் இணைக்கக் கூடாது எனவும்  மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web