அவ என் ஆளுடா..? ஒரு பெண்ணுக்காக கும்பலாக மோதிய கல்லூரி மாணவர்கள்!

 
மாணவி

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த இசை பூங்குன்றன் (20), கோவையில் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படிக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். அதே மாணவியை திருப்பூரை சேர்ந்த மற்றொரு மாணவரான அபிஷேக் (20) என்பவரும் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். 

காதல் விவகாரம் தொடர்பாக இசை பூங்குன்றனுக்கும், அபிஷேக் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், 6 பேர் கும்பல் ஈச்சனாரியில் உள்ள இசை பூங்குன்றன் அறைக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி காரில் கடத்தி சென்றனர். அப்போது அபிஷேக் தூண்டுதலின்பேரில் தான் இந்த தாக்குதல் நடந்தது தெரியவந்தது. 

மாணவி

பின்னர், ராமநாதபுரம் 80 அடி ரோடு அருகே படுகாயமடைந்த நிலையில் இசை பூங்குன்றனை சிலர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது இசை பூங்குன்றனை தாக்கியது கோவைப்புதூர் சக்திநகரை சேர்ந்த கவுசிக் பிரவீன் (25), தருமபுரியை சேர்ந்த நவீன்குமார் (19), ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த ஆஷிக் ரகுமான் (19), கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாண்டியராஜன் (21), தர்மபுரியை சேர்ந்த தீபக் (19), சஞ்சய் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

பின்னர் போலீசார் 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாக்குதலுக்கு காரணமான அபிஷேக் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவி

இதற்கிடையே மாணவர் அபிஷேக்கை ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. மாச்சம்பாளையம் பகுதிக்கு அவரை வரவழைத்த 4 பேர் கொண்ட கும்பல் அவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது ஒருவர் கத்தியால் குத்தியதில் அபிஷேக்கிற்கு தலை, நெற்றி ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை சிலர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்த புகாரில் பூங்குன்றனின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் சசிக்குமார் (22), சிராதீப் (22), கவுதம் (25) மற்றும் அபிஜித் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மாணவர்கள் மோதல் விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web