இன்று திமுக இணைகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்... வெல்லமண்டி நடராஜனும் இணைய வாய்ப்பு!
ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வைத்திலிங்கம், இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்திலிங்கம் இன்று காலை தனது எம்.எல்.ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு, காலை 10.45 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கவுள்ளார். வைத்திலிங்கத்துடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் இன்று திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது வைத்திலிங்கமும் விலகுவது ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் (இபிஎஸ் - ஓபிஎஸ்) ஒன்றிணைய வாய்ப்பு இல்லை என்பது உறுதியானதாலும், ஓபிஎஸ் அணியினர் பாஜக கூட்டணியால் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதாலும் இந்தத் தாவல் நிகழ்வதாகக் கருதப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் பலமான செல்வாக்கு கொண்ட வைத்திலிங்கம் திமுகவிற்கு வருவது, அந்தப் பகுதியில் திமுகவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
