சிதறுகிறதா பாமக? ராமதாஸ் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை மீண்டும் புறக்கணித்த அன்புமணி!

 
பாமகவில் மீண்டும் சலசலப்பு... மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தார் அன்புமணி ராமதாஸ்!
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து 3வது நாளாக அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்துள்ளனர். தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து வருவது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களாகவே கட்சியின் இளைஞர் அணி தலைவர் நிர்ணயித்தால் அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. 

அன்புமணி,  ராமதாஸ்

வார்த்தைக்கு வார்த்தை... ஐயா என்று உச்சரித்து வந்த அன்புமணி, மேடையிலேயே ராமதாஸிடம் தனது எதிர்ப்பைக் காட்டியது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்தது. 

இந்நிலையில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையேற்றி நடத்தி வருகிறார். நேற்று தொடர்ந்து 3வது நாளாக பாமக தலைவர் அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் இக்கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

 ராமதாஸ்

பாமகவில் உட்கட்சி மோதல் நீடித்து வரும் நிலையில், அன்புமணி ஆதரவாளர்கள் ராமதாஸை எதிர்த்து, தொடர்ந்து அன்புமணிக்கு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ராமதாஸ், கட்சி தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று ஒவ்வொரு கூட்டத்திலும் கூறினாலும், இந்த அதிருப்தி போக்கு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது