உறவு மேம்படுகிறதா? வங்கதேசத்துக்கு 1,00,000 டன் அரிசி - பாகிஸ்தான் அரசு முடிவு!

 
பாகிஸ்தான் வங்கதேசம்

இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு தற்போது மேம்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வங்கதேசத்திற்கு 1 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்யப் பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த அரசியல் பனிப்போர் முடிவுக்கு வந்து, வர்த்தக உறவு வலுவடைவதைச் சுட்டிக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, வங்கதேசத்திற்கு மேற்கொள்ளப்படும் அரிசி ஏற்றுமதியிலேயே இது மிகப்பெரிய ஏற்றுமதி ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகுதான் இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தக உறவில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அரிசி

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் அரிசி வர்த்தகம் தொடங்கப்பட்டது. வர்த்தகம் தொடங்கிய பிறகு, முதல் கட்டமாகப் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்திற்கு 50,000 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது மேலும் பெரிய அளவில், 1 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்யப் பாகிஸ்தான் அரசு முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, அண்டை நாடான பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை மேலும் பலப்படுத்தவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில்தான், பாகிஸ்தான் அதிகப்படியான அரிசியை வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளது.

அரிசி

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவின் மேம்பாடு என்பது, பிராந்திய ஒத்துழைப்புக்கு மிகவும் முக்கியமானது என்று பொருளாதார வல்லுநர்கள் பார்க்கின்றனர். பாகிஸ்தானிலிருந்து அதிகப்படியான உணவு தானியங்களை இறக்குமதி செய்வதன் மூலம், வங்கதேசம் தனது உள்நாட்டு உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதே நேரத்தில், அதிக அளவிலான ஏற்றுமதி பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கும் பலம் சேர்க்கும். அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதும், அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தை இரு நாடுகளும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஒரு நல்ல சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போக்குவரத்து இனி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!