வெயிலிலும், மழையிலும் சாதி இருக்கா? அதை ஒதுக்கிடுங்க... விஜய் மாணவர்களுக்கு அறிவுரை!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா தவெக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்று வரும் இந்த விழாவில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் மை டியர் யங் லீடர்ஸ் & பேரன்ஸ், படிப்புல சாதிக்கணும் ஆனா ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதிக்கணும்னு நினைக்காதீங்க, Stress ஆகாதீங்க. நீட் மட்டும் தான் உலகமா? நீட்ட தாண்டி சாதிக்க பல விஷயங்கள் இருக்கு . "வெயிலிலும், மழையிலும் சாதி இருக்கா?" பெரியாருக்கே சாதி சாயம் பூசுகிறார்கள், சாதி, மதத்தை ஒத்திவைக்க வேண்டும், சாதியை எவ்வளவு தூரமாக ஒதுக்க முடியுமோ ஒதுக்கி விடுங்கள் என பேசியுள்ளார் .
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
