உடைகிறதா திமுக கூட்டணி... திருமாவளவன் பற்றி செல்லூர் ராஜூ சொன்ன பரபரப்பு தகவல்! திமுக ஷாக்!

கூட்டணியில் உள்ள அதிமுக - பாஜக இடையே கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களும் நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பிறகு ஜெயலலிதா தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அண்ணாமலையை அதிமுக மூத்த நிர்வாகிகள் சாடிவருகின்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக தயவில்தான் பாஜக வளர்கிறது. அதிமுக மீண்டும் பெரிய கட்சியாக வலுப்பெற கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டிவிட வேண்டும் என கூறி வருகிறார்.
அண்மையில் நடந்த கூட்டத்தில் பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது என அதிரடியாக அறிவித்தார். இந்த சூழலில் திமுக கூட்டணியில் பாஜக, பாமக நெருங்குவதாக கூறப்படுகிறது. இதனால் திருமாவளவன் கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைவார் என்ற பரபரப்பு தகவல் வெளிவருகிறது.
இந்த நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வந்தால் ஏற்றுக்கொள்வோம். திருமாவளவன் எங்கள் சகோதரர். திருமாவளவன் மீது ஜெயலலிதா அன்பும், பாசமும் கொண்டவர். எடப்பாடி பழனிசாமியும் பாசம் கொண்டவர், என கூறினார்.
அதிமுகவுக்கு எதிராக பாஜகவின் நடவடிக்கை கண்டிக்கதக்கது. பாஜக தலைமை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என உறுதி அளித்துள்ளதாக பேசினார். ஜெயலலிதா உடன் ஒப்பிடுவதற்கு இங்கு யாரும் இல்லை. இனிமேல் பாஜக அதுபோன்ற செயல்களில் ஈடுபடாது. கூட்டணியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். கூட்டணி என்பது கொள்கை சார்ந்தது அல்ல எனவும் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!