மேயரின் உதவியாளர் அதிரடி கைது!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
லஞ்சம்

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் குடியிருந்து வரும் பரணி(33), என்பவர் புதியதாக கட்ட உள்ள வீட்டு வரைபடத்துக்கு அனுமதி கேட்டு மாநகராட்சியில் மனு அளித்துள்ளார். இரண்டு மாதம் கடந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் மேயரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். 

அதற்கு அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பரணி  இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் ரசாயனம் தடவிய ரூ 20 ஆயிரத்தை பரணியிடம் தந்து லஞ்சம் கேட்டவர்களிடம் தருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து பரணி மாநகராட்சி அலுவலகம் நேற்று சென்று ரகோத்தமனை பார்த்து பணத்தைக் கொடுத்துள்ளார். 

லஞ்சம்

ஆனால்  அவர் பணத்தை வாங்காமல் கடலூர் பீமராவ் தெருவில் பங்கஜம் பிளானர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆறுமுகத்திடம் (51) கொண்டுபோய் கொடுத்து  அனுமதி வழங்கப்பட்ட வரைபட டாக்குமெண்டுகளை பெற்றுக் கொள்ளலாம்  என்று கூறியுள்ளார். உடனே அங்கு சென்ற பரணி, ஆறுமுகத்திடம் ரூ 20 ஆயிரத்தை கொடுத்துள்ளார். 

அதற்கு ஆறுமுகம் ரூ 25 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனையடுத்து பரணி மாநகராட்சி அலுவலகம் சென்று இதுகுறித்து ரகோத்தமனிடம் கூறியுள்ளார். உடனே ரகோத்தமன் செல்போனில் ஆறுமுகத்துடன் தொடர்பு கொண்டு ரூ 20 ஆயிரம் பெற்றுக் கொண்டு வரைபட அனுமதி டாக்குமெண்டை வழங்கும்படி கூறியதாக கூறப்படுகிறது.

லஞ்சம்

பின்னர்  பரணி, பங்கஜம் பிளானர்ஸ் நிறுவனத்திற்கு சென்று ஆறுமுகத்திடம் ரூ 20 ஆயிரம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி மாநகராட்சி அலுவலகம் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேயரின் தனி உதவியாயராக உள்ள ரகோத்தமனையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web