“கலெக்டர் குழந்தைன்னா இப்படித்தான் இருப்பீங்களா?” கதறிய தாய்... 10வது நாளாக ஆழ்துளைக் குழிக்குள் உயிருக்குப் போராடும் 3 வயது குழந்தை!

 
சேத்னா

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதி 700 அடி ஆள்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்க, மீட்பு பணிகள் 10வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 160 அடி ஆழத்தில் குழந்தையை மீட்க தோண்டப்பட்ட சுரங்கமும் திசைமாறி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 நாட்களாக குழிக்குள் உயிருக்குப் போராடியபடி, தன்னை மீட்பார்கள் என்று நம்பிக்கையுடன் உயிரைப் பிடித்தபடியே தவித்து வருகிறாள் சேத்னா. 

சேத்னா

கடந்த டிச.23 அன்று விவசாய நிலம் ஒன்றின் 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் சேத்னா என்ற 3 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்தது. இது குறித்து தகவலறிந்து விரைந்த மீட்புப் படையினர் குழந்தையை மீட்க உள்ளூர் முறைகள் பலவற்றை முயற்சி செய்தனர். அவை அனைத்தும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்ததினால் குழந்தை விழுந்த ஆழ்துளைக்கிணற்றுக்கு அருகிலேயே 160 அடி ஆழத்திற்கு குழித்தோண்டினர்.

இந்த பணிகள் டிச.28ம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குழந்தை இருக்கும் திசைக்கு நேராக 8 அடிக்கு சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தோண்டப்பட்ட அந்த சுரங்கம் குழந்தை சிக்கியிருக்கும் திசையில் இல்லாமல் வேறு திசையில் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கல்பனா அகர்வால் தெரிவித்துள்ளார்.

சேத்னா

முன்னதாக கடந்த டிச. 23 முதல் ஆழ்துளைக் கிணற்றில் உணவு, தண்ணீர் ஏதுமின்றி  சிக்கியுள்ள குழந்தையின் உடலில் கடந்த டிச. 24 முதல் எந்தவொரு அசைவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதே கலெக்டரின் குழந்தையோ, முக்கிய பிரமுகரின் குழந்தையோ இப்படி குழிக்குள் விழுந்திருந்தால் இப்படித் தான் மீட்பு பணிகளை 10 நாட்களுக்கும் மேலாக செய்துக் கொண்டிருப்பீங்களா? என்று குழந்தையின் தாயார் கதறி அழுதுக் கொண்டிருக்கிறார். முதல் நாளில் இருந்தே மீட்புப் படையினர் சரியான திட்டமில்லாமல் அலட்சியமாகவெ செயல்பட்டு வருவதாக குழந்தையின் உறவினர்களும், கிராம மக்களும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web