உச்ச நீதிமன்றம் பாராட்டு... ஈஷா அறக்கட்டளை சேவை ‘புனித நற்பணி’!

 
ஈஷா

ஈஷா சார்பில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு மயானத்திற்கு எதிரான வழக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் போது தலைமை நீதிபதி, இந்த சேவை ஒரு புனிதமான நற்பணி என பாராட்டினார். மேலும், மனுதாரர் மற்றும் ஈஷா தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணலாம் என அறிவுறுத்தினார்.

மனுதாரர் தனது நிலத்தின் ஒரு பகுதியை ஏற்கனவே ஈஷாவிற்கு விற்றிருந்தது குறிப்பிடப்பட்டது. மீதமுள்ள நிலம் குறித்து இருதரப்பும் பேசிக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இருதரப்பும் இதை ஏற்று சமரச பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டனர்.

பஞ்சாயத்து அனுமதி மற்றும் அரசு துறைகளின் ஒப்புதலுடன் மயானம் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மயானங்களை பராமரித்து வரும் ஈஷா, ஏழை மக்களுக்கு இலவச தகன சேவையும் வழங்கி வருகிறது. சமூக நல நோக்கில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!