இஸ்ரேல் அலெர்ட்... ஈரானில் அடுத்த டார்கெட் இந்த 2 இடம் தான்... உடனே வெளியேறுங்க!

 
ஈரான்
 


 
 ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று ஜூன் 19   இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக்   மற்றும் கோண்டாப் நகரங்களில் புதிய தாக்குதல்களைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்  இந்த நகரங்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக பகுதியை விட்டு வெளியேறும்படி  எச்சரிக்கை விடுத்தது. “அராக் மற்றும் கோண்டாப் நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள குடிமக்கள், உங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேறும்படி  கேட்டுக் கொள்கிறோம். அடுத்த சில மணி நேரங்களில், இஸ்ரேல் இராணுவம் இந்தப் பகுதிகளில் இராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும்,” என IDFன் அரபு மொழி பேச்சாளர் கர்னல் அவிச்சே அட்ரீ X ல் பதிவிட்டுள்ளார்.  

ஈரான் இஸ்ரேல்

இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இஸ்ரேல் நடத்தி வரும் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ இன் ஒரு பகுதியாகும். அராக் பகுதியில் உள்ள ஈரானின் கனரக நீர் உலை  மற்றும் கோண்டாப் நகரில் உள்ள அணு ஆயுத ஆராய்ச்சி மையங்கள் இலக்காக இருக்கலாம் என்று இஸ்ரேல் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதிகளில் ஈரானின் புரட்சிப் படையின்  ஏவுகணை மற்றும் ட்ரோன் உற்பத்தி மையங்களும் உள்ளன.

இஸ்ரேல் - ஈரான்

ஈரான், இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் III’ இன் கீழ், இஸ்ரேலின் தெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களில் புதிய வகை செஜில்  பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் பல அடுக்கு வான்பாதுகாப்பு அமைப்புகளை குழப்புவதற்கு வடிவமைக்கப்பட்டவை என ஈரான் புரட்சிப் படை கூறியது. இதற்கு மறுப்பாக, இஸ்ரேல், தெஹ்ரானின் லாவிசான் பகுதியில் உள்ள இராணுவ தளத்தை தாக்கியதாகவும், இதில் ஈரானின் உளவுத்துறை மையம் அழிக்கப்பட்டதாகவும் அறிவித்தது.இந்த மோதல், ஜூன் 13 முதல் தொடர்ந்து 7வது  நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் பதிலடி தாக்குதல்களில் இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்ததாகவும், 600-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் இஸ்ரேல்  அறிவித்துள்ளது .  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது