போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் காசா மீது திடீர் தாக்குதல்... குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் பலி!
காசா , இஸ்ரேல் போர் 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. தற்போது போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பிடியிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1ம் தேதி முடிவு செய்யப்பட்ட நிலையில் இரண்டாம்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

போர் ஒப்பந்தத்தையும் மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராஃபா பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சிரியா, லெபனான் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன்மூலம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போரைத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிணைக் கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் அனைத்து போர்நிறுத்த திட்டங்களையும் நிராகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஹமாஸ் படையினர் ஈடுபபிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை. இதனால், கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போராடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
