லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்... 31 பேர் பலி, பதற்றம் உச்சம்!

 
லெபனான்

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கிய பின்னர் மத்திய கிழக்கு முழுவதும் போர் சூழ்நிலை நிலவுகிறது. ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மோதலை தீவிரப்படுத்தியது. இதன் எதிரொலியாக ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் இன்று லெபனான் முழுவதும் வான்வழி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. தலைநகர் பெய்ரூத் நகரின் தெற்கு பகுதிகள், பெகா பள்ளத்தாக்கு மற்றும் எல்லைப்பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

லெபனான் அரசின் தகவலின்படி, தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 149 பேர் காயமடைந்துள்ளனர். பலர் பொதுமக்கள் என கூறப்படுகிறது. இஸ்ரேல் தரப்பில் ‘ஐரன் டோம்’ பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. மோதல் மேலும் விரிவடையும் அபாயம் நிலவுகிறது. சர்வதேச சமூகம் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!