காசாவை தொடர்ந்து லெபனான்.. குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்..!!

 
லெபனான்

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லாவின் மீது போர் விமான  தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் சனிக்கிழமை கூறியது. முன்னதாக, லெபனானில் இருந்ததைப் போலவே வடக்கு இஸ்ரேலிலும் ஹெஸ்புல்லா சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் இந்த வான்வழி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையின்படி, இஸ்ரேல் விமானப்படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த போர் விமானங்கள் வெள்ளிக்கிழமை லெபனான் மீது குண்டுவீசின. தாக்குதல் தெற்கு லெபனானின் ஐடா அல்-ஷாப், யாரோன் மற்றும் ரம்யா போன்றவற்றில் உள்ள 'பயங்கரவாத' (ஹிஸ்புல்லா) நிலைகளை குறிவைத்தது.

Israeli Air Force Strikes Hezbollah Operational Command Center in Lebanon -  IDF - 06.01.2024, Sputnik Africa

மேலும், ஹிஸ்புல்லா பிரிவு மீது விமானப்படை விமானம் தூரத்தில் இருந்து தாக்குதல் நடத்தியது. முன்னதாக, லெபனானின் டவுலா மற்றும் மார்கலியோட் பகுதிகளில் இருந்து ராடார் மூலம் ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. விமானத் தாக்குதலின் காணொளியும் அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தங்கள் நாட்டில் ஹிஸ்புல்லா துணைத் தலைவா் சலே அல்-அரூரிவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, அந்த நாட்டின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது.அல்-அரூரி படுகொலைக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பழிவாங்காவிட்டால் லெபனான் முழுவதும் இஸ்ரேல் தாக்குதலுக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்று அந்த அமைப்பிம் தலைவா் நஸ்ரல்லா வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா். 

அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்புகள் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. கடந்த அக்., 7ம் தேதி ஹமாஸ் படைகள் நுழைந்து அங்கு சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அதன்பிறகு, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிப்பதாக உறுதியளித்துள்ள இஸ்ரேல், காசா பகுதியில் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஹிஸ்புல்லா அமைப்புகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதனால், ஹிஸ்புல்லாவுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், அது முழு அளவிலான போராக மாறவில்லை. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த செவ்வாய்கிழமை ஏவுகணை தாக்குதலில் ஹமாஸின் இரண்டாம் நிலை தலைவர் சலே அல்-அரூரி தனது மெய்க்காப்பாளர்கள் 5 பேருடன் கொல்லப்பட்டார்.

Israel, Hezbollah trade fire across Lebanon border amid alarm over Gaza war  spillover | Reuters

ட்ரோன் தாக்குதலுக்கு இஸ்ரேல் பகிரங்கமாக பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்த தாக்குதலை அந்நாட்டு நடத்தியதாக நம்பப்படுகிறது. இந்தப் படுகொலையும், லெபனான் எல்லைப் பகுதியில் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களும் காஸா போர் லெபனானுக்கும், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவுவதற்கான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், லெபனானுக்குள் இஸ்ரேல் விமானங்கள் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web