காசாவில் மீண்டும் ஈஸ்ரேல் தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு!

 
காசா
 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஈஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 17 பல்லஸ்தினியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த பகுதிகளில் பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஈஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலால் பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காசா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்கள் மனிதாபிமான நெருக்கடியை அதிகரித்துள்ளதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. சமாதான பேச்சுவார்த்தைகள் அவசியம் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் அந்த பகுதி மக்களிடம் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!