ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும்.. திட்டவட்டமாக தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்..!!

 
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஒட்டுமொத்த ஹமாஸ் படை அழியும் வரை போர் தொடரும் என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்...

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தற்போது போர் 100வது நாளை எட்டியுள்ளது.

இஸ்ரேல்

இந்த நிலையில் தொலைக்காட்சி நேரலையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ,  எங்களை யாரும் தடுக்க மாட்டார்கள் என்று கூறினார். வெற்றி வரை போர் தொடரும். காசாவில் இராணுவத் தாக்குதலில், ஹமாஸ் படைகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் அழித்தோம். ஒட்டுமொத்த ஹமாஸ் படை அழிப்போம்.

வெற்றி வரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

சர்வதேச சட்டம் உள்ளது. இது ஒரு எளிய விஷயத்தைச் சொல்கிறது. வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப மாட்டார்கள். எகிப்து-காசா எல்லைக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது. இது காசாவிற்கு ஒரு முக்கிய விநியோக பாதையாகும். இந்த சாலையை மூடும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என கூறினார்..

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web