காபி கோப்பையுடன் நெதன்யாகு... வதந்திக்கு முற்றுப்புள்ளி... வைரல் வீடியோ!

 
நெதன்யாகு நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் இன்று ஒரு நெகிழ்ச்சியான மற்றும் நையாண்டி கலந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜெருசலேம் நகரின் புறநகரில் உள்ள ஒரு காபி ஷாப்பிற்குச் சென்ற நெதன்யாகு, அங்கு காபி ஆர்டர் செய்து குடித்தபடி தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) தளத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். "நான் இறந்துவிட்டதாகச் சொல்கிறார்களே?" என்று தனது உதவியாளர் கேட்கும் கேள்விக்கு, எபிரேய மொழியில் உள்ள ஒரு சிலேடை வார்த்தையைப் பயன்படுத்தி (Slang), "நான் காப்பியை 'உயிருக்கு மேலாக' நேசிக்கிறேன் (I'm dying for coffee)" என்று சிரித்தபடி பதிலளித்தார். இதன் மூலம் தான் உயிரோடு இருப்பதை உலகிற்கு அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, நெதன்யாகுவின் முந்தைய வீடியோ ஒன்றில் அவரது கையில் ஆறு விரல்கள் இருப்பது போலத் தெரிந்ததாகவும், அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்றும் சமூக வலைதளங்களில் சில கோட்பாடுகள் வைரலாகின. அவர் ஈரானின் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அதனை மறைக்க இஸ்ரேல் அரசு 'ஏஐ' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்திகளைப் பரப்பின. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய வீடியோவில் தனது இரு கைகளையும் கேமரா அருகில் கொண்டு வந்து, "விரல்களை எண்ணிக் கொள்ளுங்கள்" என்று கேலி செய்துள்ளார். மேலும், "எனது மக்களை நான் உயிருக்கு மேலாக நேசிக்கிறேன், அவர்கள் காட்டும் உறுதி எனக்குப் பெரும் வலிமையைத் தருகிறது" என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) நெதன்யாகுவைக் கொல்லப்போவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், அவர் பொது இடத்தில் இயல்பாக உலா வருவது சர்வதேச அளவில் கவனித்தைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுக் கூட்டங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்திய நெதன்யாகு, தங்களின் ராணுவம் மற்றும் மொசாத் அமைப்பு ஈரானிலும் லெபனானிலும் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். "நாங்கள் எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது, ஆனால் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன" என்று அவர் அதிரடியாகக் கூறியுள்ளார். நெதன்யாகுவின் இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்