இஸ்ரோ 'மெகா' சாதனை! விண்ணில் இருந்து கடலில் விழுந்த ககன்யான் கலன்!

 
இஸ்ரோ இஸ்ரோ

இந்தியாவின் கனவுத் திட்டமான 'ககன்யான்' மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில், இஸ்ரோ (ISRO) இன்று மற்றுமொரு இமாலயச் சாதனையைப் படைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று (ஏப். 10) நடைபெற்ற இரண்டாவது 'ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை' (IADT-02) மிகப்பெரிய வெற்றியைத் தழுவியுள்ளது. விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்புவதை உறுதி செய்யும் இந்தச் சோதனை, இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

சுமார் 5.7 டன் எடை கொண்ட ககன்யான் மாதிரி விண்கலன், இந்திய விமானப் படையின் 'சினூக்' ஹெலிகாப்டர் மூலம் சுமார் 3 கிலோமீட்டர் உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, வங்கக்கடல் பகுதியில் அந்தரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. ராட்சத பாராசூட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக மிகத் துல்லியமாக விரிந்து, அந்த விண்கலனின் வேகத்தைக் குறைத்து, கடலில் மென்மையாகத் தரையிறக்கியது. இந்த விறுவிறுப்பான சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் கடற்படையினர் மிகத் தீவிரமாகக் கண்காணித்து, பின்னர் கடலில் விழுந்த கலனை வெற்றிகரமாக மீட்டனர்.

இந்த மகத்தான வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு (2027) விண்ணுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ள இஸ்ரோ, அதற்கு முன்னோடியாக ரோபோ மனிதனான 'வயோமித்ரா'வை அனுப்பிச் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது. இன்றைய சோதனையின் மூலம், இந்திய விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்புவதற்கான தொழில்நுட்பம் 100 சதவீதம் தயார் என்பது நிரூபணமாகியுள்ளது. உலக நாடுகளே வியந்து பார்க்கும் இந்தச் சாதனையானது, இந்தியா விண்வெளித் துறையில் ஒரு வல்லரசாக உருவெடுத்துள்ளதை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்