அடக் கொடுமையே... 5 நாட்களுக்கு வெப்பநிலை இன்னும் அதிகரிக்குமாம்.. வானிலை மையம் ஹாட் செய்தி!

 
வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சாலையோர இளநீர் கடை, குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதை பார்க்க முடிகிறது. இன்னும் இரண்டு மாதம் எப்படிதான் இந்த வெயிலை தாங்கபோகிறமோ என நினைக்கும் அளவுக்கு இந்த கொடிய வெப்பம் உள்ளது.

வெயில்

இந்நிலையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். 9, 10ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

வெயில்

11ம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும், என தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web