கல்யாணமாகி 3 மாசம் தான் ... அரிவாளால் மனைவியையும், மைத்துனனையும் வெட்டிக் கொலை செய்த கணவன்!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள முத்தையன் செட்டிபட்டி பகுதியில், திருமணமான மூன்று மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியையும் அவரது அண்ணனையும் கணவன் பிரதீப் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நிகழ்ந்த போது, நிகிலா தன் சொந்த பொருட்களை எடுத்துக்கொள்ள தாய் வீட்டில் இருந்து அண்ணன் விவேக் உடன் பிரதீப்பின் வீட்டுக்கு வந்தார். அங்கு வாக்குவாதம் வெட்டுப்பாடு நிலையில், பிரதீப் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு, மனைவி நிகிலாவையும், மைத்துனர் விவேக் ஆகிய இருவரையும் வெட்டி கொலை செய்தார். சம்பவம் பட்டப்பகலில் நடந்ததால், பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்தில் சென்று பிரதீப்பை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட நிகிலா மற்றும் விவேக் ஆகியோரின் உடல்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
