ந்தா ஆரம்பிச்சுட்டாங்க... “நீங்க தோற்றதுக்கு பாஜகவா காரணம்? அதிமுகவின் முக்கிய புள்ளிக்கு பாஜக நிர்வாகி எச்சரிக்கை!

 
தமிழக பாஜக
மிழ்நாட்டில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த கூட்டணி சற்று வருத்தத்தை தருவதாக பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். அதன் பிறகு அதிமுகவை காப்பாற்ற வேண்டிய சூழல் இருப்பதால் இஸ்லாமியர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன் நிர்பந்தத்தின் காரணமாகத் தான் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக பேசியுள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகிகளின் இந்த பேச்சுக்கு தற்போது திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், குணசேகரன் அண்ணா உங்களுக்குத் தான் இந்த பதிவு. எதுவுமே கவலைப்படுவதாக இல்லை. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததில் பிரச்சனை என்கிறீர்கள். நீங்கள் பேசியது தவறு. நான் உங்களிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன். நீங்கள் 3 முறை வெற்றி பெற்ற அந்த வார்டில் இன்று எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள்.

அண்ணாமலை

நீங்க 64 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் அதே வார்டில் பாஜக 484 வாக்குகள் வாங்கியுள்ளது. நீங்கள் தோற்றுப் போனதற்கு பாஜகவை பற்றி பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் உங்களுக்கு கிடையாது.  இது நல்லது இல்லை. நீங்கள் தோற்றதற்கு பாஜகவா காரணம் அண்ணா சொல்லுங்கள். மேலும் நீங்கள் மூன்று முறை வெற்றி பெற்ற இடத்தில் தோல்வி அடைந்தீர்கள் என்றால் அதற்கு பாஜக இல்லாதது தான் காரணம்” எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web