சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... பதறும் மக்கள்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

 
புயல் காற்றழுத்த

'டிட்வா' புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், பல மணி நேரமாக ஒரே இடத்தில் நிலவிய இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக நகர் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்ததால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்திற்கு இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதன் தீவிரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும், அதன் பிறகு, கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

மழை கனமழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றும் பணியிலும், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகப் பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ. எனப் பதிவாகி உள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 4 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகச் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!