முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது வரலாற்று கொடுமை... சீமான் பேட்டி!
திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை என்று சீமான் கருத்து தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு என்பது இனத்தின் அடிப்படை உரிமை. தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட தமிழில் இறை வழிபாடு நடத்தப்படுகிறது.

தமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழ்மொழியில் குடமுழுக்கு நடக்காது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். முருகனே தமிழ் தான், முருகனை விட்டு தமிழை எப்படி பிரிப்பீர்கள். எங்கள் சமயம் சைவம். சைவத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது. தமிழில் இருந்து சைவத்தை பிரிக்க முடியாது. முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை” என்று கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
