எப்பவும் குரைச்சுக்கிட்டே இருக்கு... ஆத்திரத்தில் பக்கத்து வீட்டு நாயை உயிரோடு புதைத்த பெண்மணி! வைரலாகும் வீடியோ!

 
நாய்

எப்பவுமே குரைச்சுக்கிட்டே இருக்கு. நைட்ல தூங்கவும் முடியலை.. குரைக்கிற சப்தம் எரிச்சலாகவே இருக்கு என்று பிரேசிலில், பக்கத்து வீட்டினர் வளர்த்து வந்த நாயை , குழி தோண்டி மூதாட்டி ஒருவர் உயிருடன் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் ப்ளானுரா பகுதியில் 82 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள 33 வயது பெண் வளர்க்கும் செல்ல நாயான நீனா, எப்போதும் இரவில் குரைத்துக் கொண்டே இருப்பதால் தூங்க முடியாமல் எரிச்சல் அடைந்த மூதாட்டி, அந்த நாயைத் தனது தோட்டத்திலேயே இரவோடு இரவாக குழி தோண்டி புதைத்துள்ளார். 

திடீரென தனது நாய் காணாமல் போனதால் பரிதவித்துப் போன பெண் உரிமையாளர், இது குறித்து மூதாட்டியிடம் கேட்கவே, ஆமாம்... எப்பவும் குரைச்சுக்கிட்டே இருந்ததால நான் தான் அங்க குழி தோண்டி புதைச்சேன் என்று சாவகாசமாக மூதாட்டி கூறியுள்ளார். இதனையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரமாக குழிக்குள் பரிதவித்த நாய் நீனா உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது. 

இது குறித்து நீனாவின் உரிமையாளர் மூதாட்டியிடம் முறையிட்ட போது, “அந்த நாய் இந்தப் பக்கம் இனி வரவே கூடாது” என மிரட்டியுள்ளார். இதையடுத்து நீனாவின் உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

Brazil

மூதாட்டியிடம் போலீசார் விசாரித்த போது கூட, “மீண்டும் குரைத்தால் மறுபடியும் குழி தோண்டி புதைப்பேன்” என்று கொஞ்சம் கூட பயமின்றி எச்சரித்து போலீசாரையே மிரள வைத்துள்ளார் பாட்டி. விலங்குகளிடம் வன்முறையாக நடந்து கொண்டதற்காக அந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web