விஜய் கையை காட்டினால் போதும்.. எம்.எல்.ஏ ரெடி... ஈரோட்டில் மாஸ் காட்டிய செங்கோட்டையன்!

 
செங்கோட்டையன்

தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரியைத் தொடர்ந்து தற்போது ஈரோட்டில் தனது பலத்தை நிரூபித்து வருகிறார். இதற்காக பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையே ஸ்தம்பிக்கும் வகையில் தொண்டர்கள் குவிந்துள்ளதால், போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர். குன்னத்தூர் நால் ரோடு பகுதியில் பாதுகாப்புக்காக பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ள நிலையில், மேடையில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசிய பேச்சு இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையன்
ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானத்தை சாதாரணமாகத் தூக்கி எறிந்துவிட்டு, மக்களுக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்று செங்கோட்டையன் மேடையிலேயே அதிரடியாகத் தெரிவித்தார். 234 தொகுதியிலும் விஜய் யாரை கைக் காட்டுகிறாரோ, அவர்தான் சட்டமன்ற உறுப்பினர்! நாளை தமிழகத்தை ஆளப்போவது விஜய்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் ஆவேசமாக முழங்கினார். ஒரு நல்ல தலைவரைத் தேடிக் கொண்டிருந்த மக்களின் எண்ணம் இப்போது நிறைவேறிவிட்டதாக அவர் கூறிய போது தொண்டர்களிடையே பலத்த கரகோஷம் எழுந்தது.செங்கோட்டையன்

மக்களுக்குப் பணியாற்ற வந்திருக்கும் ஒரு தலைவரை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு புரட்சித் தளபதியாக இப்போதுதான் பார்க்கிறேன் என்று விஜய்யை செங்கோட்டையன் வானளாவப் புகழ்ந்தார். இது வெறும் கூட்டம் அல்ல, வரப்போகும் தேர்தலில் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பு என்று எச்சரித்த அவர், தமிழகத்தின் எதிர்காலம் இனி பிரகாசமாக மாறப் போகிறது என்பது இந்தக் கூட்டத்தின் மூலமே தெரிகிறது என்று கூறி மேடையை அதிரவைத்தார். அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது தமிழக மக்களிடையே எகிறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!