இனி பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம் கிடையாது... உயர்நீதிமன்றம் உத்தரவு!

பாஸ்போர்ட் எடுக்க பொதுவாக இருப்பிட சான்று, முகவரி , அடையாள அட்டை , ஆதார் கார்டு, ரேஷன்கார்டு என வரிசையாக பட்டியலிடுவர். அந்த வகையில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். கணவனிடம் கையெழுத்து வாங்கி வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறிவிட்டார்.
இது குறித்து அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவனின் அனுமதியோ, கையெழுத்தோ மனைவி பெறவேண்டிய அவசியம் கிடையாது.
கனவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது என விசாரணையில் கூறினார். கணவனிடம் கையெழுத்துப் பெற வேண்டும் என வற்புறுத்துவதன் மூலம் ஒரு பெண்ணை கணவனின் உடைமையாக கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது என நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்தார். அதே நேரத்தில் திருமணம் ஆகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை எனவும்விளக்கம் அளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!