'ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்பது தப்பல்ல!' - சென்னையில் சச்சின் பைலட் பேட்டி!​​​​​​​

 
காங்கிரஸ் சச்சின் பைலட்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் 'அதிகாரப் பகிர்வு' குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், திமுக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிய அதே வேளையில், காங்கிரஸின் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் திமுக

"ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது பிரதிநிதித்துவத்தை விரும்புவது இயல்பானது. தமிழக மக்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் தமிழக அரசியலில் எப்போதும் கால்ஊன்ற முடியாது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிக நன்றாகச் செயல்பட்டு வருகிறது. அவர்களின் திட்டங்கள் மக்களைக் கவர்ந்துள்ளன."

சச்சின் பைலட்டின் இந்தக் கருத்து, ஏற்கனவே காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் முன்வைத்த "கூட்டணி ஆட்சி" கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!