கடைசி வரை நிறைவேறாத விஜயகாந்த் ஆசை.. மகன்கள் திருமணம் பார்க்காமல் மறைந்து விட்ட சோகம்..!!
கடைசி வரை மகன்களின் திருமணத்தை பார்க்காமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக நேற்று காலை காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடல் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிக்கு 1990ல் திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த தலைவர் விஜய் பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க விஜயகாந்த் முயற்சி செய்து வருகிறார். மூத்த மகன் விஜய் பிரபாகரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்த்து நிச்சயம் செய்யபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் உடல்நலக்குறைவால் விஜய் பிரபாகரனின் திருமணத்தை நடத்த முடியாமல் போனதாக தெரிகிறது. உடல்நிலை சரியில்லாத போதிலும், அவர் தனது மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதுகுறித்து மனைவி பிரேமலதாவிடம் அடிக்கடி கூறி வந்ததாக கூறினார். கடைசி வரை மகன்களின் திருமணத்தை பார்க்காமல் அவர் இறந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
