தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுகவின் கடமை... பிரேமலதா விஜயகாந்த்!
தமிழகத்திற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி திமுகவில் 3 வேட்பாளர்கள், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு 1 என 4 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரேமலதா தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுவின் கடமை. மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை என்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள், நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக விஜய் ஏற்கனவே கூறிய நிலையில் பிரேமலதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
