“தவம் கிடப்பதாக அண்ணாமலை சொன்னது அதிமுகவை அல்ல” எடப்பாடி பேட்டி!

சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கு திமுக தான் பிரதான எதிரி என்று கூறியிருந்தார். அப்படியெனில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில், கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலளிக்கும் போது, 'பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால் தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு நான் பெருமைப்படுகிறேன். நேரம் வரும் போது கூட்டணி குறித்து பேசப்படும்' என்றார்.
நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அதிமுகவை அண்ணாமலை இவ்வாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டத்துக்குப் பின்னர் இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்புகையில், அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம். 6 மாதங்களுக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டேன்' என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!