வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி வழங்கும் இத்தாலி!

 
ஈரான் ஈரான்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

பிப்ரவரி 28 முதல் நடைபெற்று வரும் இந்த மோதலில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பகுதிகளும் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக வளைகுடா நாடுகள் முழுவதும் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. பல நாடுகள் தங்களது பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்க இத்தாலி தயாராக இருப்பதாக பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல உதவிகளை வழங்க முன்வருவதாக அவர் கூறினார். அந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள் வசித்து வருவதாலும் அங்கு உள்ள சுமார் இரண்டாயிரம் வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!