நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்து... ஐடிஐ மாணவர் பலி!

 
 பைக் விபத்து
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய பைக் மரத்தில் மோதிய விபத்தில் ஐடிஐ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த ஆறுமுககனி மகன் முத்துராஜ் (20). இவர், தூத்துக்குடியில் உள்ள அரசு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் வேலாயுதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அவர் மோட்டார் சைக்கிளில் சன்றார். 

 பைக் விபத்து

அந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் மீண்டும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். சில்லாநத்தம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியுள்ளது. இதில் நாய் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கம்பியில் உரசிய நிலையில், அருகில் இருந்த மரத்தில் மோதியது. 

தெரு நாய்

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web