ITR ரீஃபண்ட் ‘ஆன் ஹோல்ட்’… எச்சரிக்கை எஸ்எம்எஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

 
ITR

கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோருக்கு “உங்கள் ITR ரீஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்ற எஸ்எம்எஸ் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு மாதங்களுக்கு பிறகு சிக்கலை கண்டறிந்த வருமான வரித்துறை, அதை சரிசெய்ய சில நாட்களே அவகாசம் கொடுத்துள்ளது. விரிவான இமெயில் வராமல், SMS அல்லது போர்ட்டலில் மட்டும் அலர்ட் வந்ததால் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

வருமான வரி சோதனை

ITR Processing on Hold என்பது நோட்டீஸ் அல்ல. ரீஃபண்ட் விவரங்கள், வருமான வரித்துறையிடம் உள்ள AIS, 26AS தரவுகளுடன் பொருந்தவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. TDS முரண்பாடு, AIS-ல் உள்ள வருமானம் காட்டப்படாமை, திடீர் அதிக ரீஃபண்ட், ஆதாரமற்ற வரி விலக்குகள் போன்ற காரணங்களால் இந்த சிக்கல் உருவாகிறது.

வருமான வரி

எனவே உடனே ITR Portal-ல் Login செய்து e-Proceedings பகுதியைச் சரிபார்க்க வேண்டும். தவறு இருந்தால் 31-12-2025க்குள் திருத்தப்பட்ட படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். தகவல்கள் சரியாக இருந்தால் பதற்றம் தேவையில்லை; சரிபார்ப்புக்குப் பிறகு ரீஃபண்ட் தானாகவே கிடைக்கும். ஜனவரி 1, 2026க்குப் பிறகு திருத்தம் செய்தால் அபராதம் மற்றும் கூடுதல் வரி கட்ட வேண்டிய நிலை வரும் என்பதே முக்கிய எச்சரிக்கை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!