அடக் கொடுமையே.. 2 கி.மீட்டர் தூரத்துக்கு ரயில் தண்டவாளத்தை பெயர்த்து திருடிச் சென்ற மர்ம கும்பல்!

 
ரயில் தண்டவாளம்

ரயில் பயணங்களில், ஏசி பெட்டிகளில் வழங்குகிற தலையணை, பெட்ஷீட்களை யாரும் பார்க்காத நேரத்தில், பையினுள் திணித்து வீட்டிற்கு எடுத்து செல்பவர்களைப் பார்த்திருப்போம். அட.. திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா தலையணை என்ன? தண்டவாளம் என்ன என்று முடிவு செய்திருப்பார்கள் போல. பீகாரில் சுமார் 2 கிலோ மீட்டர்  தூரத்திற்கு ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள், தண்டவாளம் இருந்த இடமே தெரியாத அளவுக்கு அப்படியே பெயர்த்து எடுத்து, திருடி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. 

பீகார் மாநிலம் பரௌஹ்னி நகரில் க்ரஹாரா என்ற ரயில் நிலையத்தில் பயன்படுத்தாமல் இருந்த டீசல் எஞ்சினை பார்ட் பார்ட்டாக கழற்றி மர்ம நபர்கள் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே, கடந்த வாரம் மற்றோரு பகீர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Bihar

பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சரக்குகளை ஏற்றி செல்வதற்காக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த சர்க்கரை ஆலை சில ஆண்டுகளாக இயங்கவில்லை. எனவே, இந்த ரயில் பாதையில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை ஒரு மர்ம கும்பல் திருடி விற்றுள்ளது. இந்த விஷயமானது கடந்த ஜனவரி 24-ம் தேதி தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஷயத்தை கேள்விபட்ட அதிர்ச்சி அடைந்த ரயில்வே நிரவாகம் இரு ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. 

Bihar

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவு விடுத்துள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் ரயில்வே ஊழியர்களும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் ஜனவரி 19-ம் தேதி, பீகார் தலைநகர் பாட்னாவில் செல்போன் டவரை திருடிச் சென்ற பரபரப்பு சம்பவம் நடந்து குறிப்பிடத்தக்கது.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web