கொளுத்துது வெயில்... கோடைக்காலத்தில் இந்த ஷேர்கள் எகிறும்! நிபுணர்களின் கணிப்பு!

 
ஐஸ்க்ரீம்

இந்தியாவில் இந்த ஆண்டின் கோடை காலம் மிக உஷ்ணமாக, அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், இந்தியாவில் இப்போது ஏசி, ஏர் கூலர்கள், ரெப்ரிஜிரேட்டர்கள் உள்ளிட்ட குளிரூட்டும் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 'வொயிட் கூட்ஸ்' என்று குறிப்பிடப்படும் குளிரூட்டும் அனைத்து விதமான பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

ஏர் கூலர்

இது தொடர்பாக எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் நிர்வாகிகள் கூறியதாவது... இந்தியாவில் ஏசி, ரெப்ரிஜிரேட்டர் உட்பட சில வகையான பொருட்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விற்பனை உயர்வை எதிர்பார்த்து கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இவற்றின் விற்பனை 60 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. ஆனால், சந்தை விற்பனை இப்போது நாங்கள் எதிர்பார்த்த அளவைவிட அதிகரித்துள்ளது. 

கூலர்

இதனால், இந்தியா முழுவதும் உள்ள எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அதிகம் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளின் உற்பத்தியை, இப்போது 100 சதவீதம்... அதாவது முழு அளவுக்கு அதிகரித்துள்ளன. இன்னும் சொல்லப் போனால், கடந்த 18 மாதங்களில் இல்லாத வகையில், வரும் நாட்களில் இவற்றின் உற்பத்தி அதிகமாக இருக்கும். ஏசி, ரெப்ரிஜிரேட்டர், ஏர்கூலர்கள் என்று விதவிதமான குளிரூட்டும் பொருட்கள் மட்டுமல்ல, பீர் உற்பத்தியும் கணிசமான அளவு அதிகரிக்கும் என்கின்றனர்.

இதனால் குளிரூட்டும் பொருட்கள், ஐஸ்கிரீம் வகைகளை உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும் அப்பங்குகளில் கவனத்தை செலுத்தலாம் எனவும் சந்தை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web